சுனாமி
ஆழிப் பேரலையே
அடித்ததென்ன எங்களையும்
சுனாமி எனும் பெயர்கொண்டு
பூமியில் பாதியை அழித்ததென்ன
சிக்கிவிட்ட சில்லறைபோல்
சிதறியதே சிந்தனைகள்
கொண்டுவந்த சுமைகளை
சுழுக்கெடுத்துவிட்டாய்
அப்போது எம் வேதனை தெரியவில்லையா?
இப்போது உன் கொடுமை புரியவில்லையா?
சுனாமிப் பேரலையே
சுற்றத்தைக் கொன்றதுமேன்
ஓங்கி அலையடித்து
ஊரை அழித்ததுமேன்
உறக்கம் கலையுமுன்னே
மக்கள் உயிரைப் பறித்ததுமேன்
பச்சைப் பாலகர்கள் செய்த
பாவமென்ன சொல்லு
மிச்சமேதுமின்றி
குடும்பங்கள் மறைந்தனவே
பேயாக வந்த கடலலையால்
பிணமானோம்
ஆற்ற முடியவில்லை - மனம்
ஆறாத் துயரில்
மறக்க முடியவில்லை - இன்னும்
ஈர நினைவுகள்
(நிசாந்தனின் மறைவை நினைத்து எழுதியது)
- சதீஸ்காந்தன்
(வகுப்பு 8, கதிரொளி சிறுவர் இல்லம்)
01/2005
2 Comments:
This comment has been removed by a blog administrator.
தம்பி சதீஸ்,
“சிக்கிவிட்ட சில்லறைபோல்
சிதறியதே சிந்தனைகள்”
இது நல்ல காட்சிப்படுத்தல் உள்ள கவிதை வரி. இப்படி காட்சி அமைப்புடன் கவிதைகள் எழுதப்பட்டால் தான் மக்களின் மனங்களை அந்தக் கவிதைகளால் தொடமுடியும். நடந்த ஓரு விடயத்தை எல்லாரும் சொல்வது போல நீங்களும் சொன்னால் அது செய்தி சொல்வது போல் வந்து விடும். ஆகவே அந்த விடயம் உங்களின்; மனதில் எப்படி விளங்கப்பட்டுள்ளது (நடந்ததை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்) என்பதை இயன்ற வரை காட்சி அமைப்புடன் எழுத முயற்சி செய்யுங்கள். யாருக்காவது கவிதையில் சவால் விடுவதென்றால் கூட சரியான காட்சி அமைப்பு இல்லை எனில் ஊர்வலங்களில் வரும் கோசம் போல் வந்து விடும்ஃ மேலே உள்ள உங்கள் கவிதை வரிகள் உங்களிடம் நல்ல கவிதைகள் எழுதுவதற்கான நல்ல ஆரம்பம் இருப்பதைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள.; தொடருங்கள்.
சுடர் முருகையா
Post a Comment
<< Home